12:49:23
Monday
20 August 2018

ஶ்ரீ முருகன் நிலையத்தின் 'காண்டீவ லீக்'

ஶ்ரீ முருகன் நிலையத்தின் 'காண்டீவ லீக்'
பிரிக்பீல்ட்ஸ், ஏப்.3:
மாணவர்களைச் சோதிக்க நடத்தப்படும் தேர்வு ஒரு போர்க்களத்திற்கு ஒப்பானது. போருக்குத் தயாராகும் வீரர்கள் எவ்வாறு பயிற்சி எடுத்துக் கொண்டு ஆயுதமேந்தி தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கிறார்களோ அதேபோல படிவம் 3 மாணவர்களும் நுனிவிரலில் அனைத்து நுணுக்கங்களையும் உள்ளடக்கிய சாதுரியர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பிரிக்பீல்ட்ஸ் ஶ்ரீ முருகன் நிலையம் 'காண்டீவ லீக்' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அக்டோபர் மாதத்தில் வரும் தேர்வுக்கு இப்போதே ஏன் தயாராக வேண்டும் என்ற அலட்சியம் மாணவர்களிடையே துளிர்விடக் கூடாது. போருக்குத் தயாராகும் வீரனைப் போல தினசரி பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதற்காக, பிரிக்பீல்ட்ஸ் ஶ்ரீ முருகன் நிலையம் 'காண்டீவா லீக்' என்ற திட்டத்தின் வாயிலாக சிறப்பு நடவடிக்கைகளை நடத்தவுள்ளது. 

அவ்வகையில், பிடி3 மாணவர்களுக்கு வாரந்தோறும் வகுப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வின் முடிவுகள், மாணவர்களின் வருகை போன்ற கூறுகளை உட்படுத்தி சிறப்புப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. முதன்மை வெற்றியாளருக்கு 2,000 வெள்ளி மதிப்பிலான மடிக்கணினி அன்பளிப்பாக வழங்கப்படும் வேளையில், இதர வெற்றியாளர்களுக்கும் சிறந்த பரிசுகள் வழங்கப்படும் என பிரிக்பீல்ஸ்ட் எஸ்எம்சி நிலைய ஒருங்கிணைப்பாளர் அஷோக் கூறினார். 

காண்டீவம் என்பது ஒரு வில்லின் பெயர். இந்த தெய்வீக வில்லை உருவாக்கியவர் பெரும் தகப்பன் பிரம்மதேவர் ஆவார். அவர் அதனை 1,000 ஆண்டுகள் வைத்திருந்தார். பின் சிவன் 1,000 ஆண்டுகளும் பிரஜாபதி 503 ஆண்டுகளும் பின்பு தேவேந்திரன் 580 ஆண்டுகளும் சந்திரன் 500 ஆண்டுகளும் அவருக்குப் பின் நீர்கடவுளான வருணன் 100 ஆண்டுகளும் வைத்திருந்ததாக அறியப்படுகிறது. பின் காண்டவ வனஎரிப்பு நிமித்தமாக அக்னிதேவனின் வேண்டுகோளுக்கிணங்க வருணபகவானால் காண்டீவம் அர்ஜுனனுக்கு வழங்கப்பட்டது. இந்த வில்லினை அர்ஜுனன் 65 ஆண்டுகள் வைத்திருந்தார். அன்றிலிருந்து மாவீரன் அர்ஜுனன் காண்டீவதாரி எனும் பெயர்கொண்டு அழைக்கப்படுகிறார். 


பிரிக்பீல்ட்ஸ் எஸ்எம்சி ஒருங்கிணைப்பாளர் அஷோக்

இந்த காண்டீவத்தை பயன்படுத்த சாமானியர்களால் இயலாது. அதற்கு அசாதாரண வில்லாற்றல் அவசியமாகும். இந்த திவ்ய வில் இடியின் முழக்கத்தை உண்டாக்க வல்லதாகும். காண்டீவம் மிகவும் கனமானது. இதை எளிதில் எவராலும் தூக்க இயலாது. எனினும் அர்ஜுனர் இதை மிக சுலபமாக உபயோகிக்கும் வல்லமை பெற்றிருந்தார். 

தேர்வுக் களத்தில் மாணவர்கள் அர்ஜுனர்களாக திகழ வேண்டும் என்பதே எஸ்எம்சியின் நோக்கம். எஸ்எம்சியின் பயிற்சிகளும், தேர்வு உத்திகளுமே மாணவர்களுக்கு வழங்கப்படும் காண்டீவம். கடினமான காரியம் கூட பழக பழக சுலபமாகி விடும். இப்போதிலிருந்தே பயிற்சிகளின் வழி மாணவர்களை தயார் செய்து, நல்ல அடைவுநிலையைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே பிரிக்பீல்ட்ஸ் மையத்தின் நோக்கம் என இத்திட்டத்தின் ஏற்பாட்டாளர் இந்துமதி தெரிவித்தார். 


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.