15:01:24
Tuesday
23 October 2018

மன்னிப்பு கோரினார் துங்கு இஸ்மாயில்!

மன்னிப்பு கோரினார் துங்கு இஸ்மாயில்!
கோலாலம்பூர், மார்ச் 29: எஃப்.ஏ.எம் எனப்படும் மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவராக தாம் பதவியேற்ற பின்னர் மலேசிய கால்பந்து அணி, ஹரிமாவ் மலாயா எந்த ஓர் அனைத்துலக ஆட்டத்திலும் வெற்றி பெறாததற்கு தாம் மன்னிப்பு கோருவதாக ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

ஜோகூர் செளதர்ன் டைகர்ஸ் எனும் ஃபேஸ்புக்  பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் துங்கு இஸ்மாயில் இவ்வாறு தெரிவித்தார். எஃப்.ஏ.எம் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொண்டாலும், தேசிய கால்பந்து அணிக்கு தாம் தொடர்ந்து ஆதரவை வழங்கவிருப்பதாக துங்கு இஸ்மாயில் கூறினார். 

தலைவர் பதவியில் இருந்து தாம் விலகிக் கொண்டுள்ளதால் இனி வரும் ஆட்டங்களில் தேசிய கால்பந்து அணி வெற்றி பெறும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். தேசிய கால்பந்து அணி நிச்சயம் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக துங்கு இஸ்மாயில் கூறினார். 

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2019 ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் மலேசியா 1- 2 என்ற கோல்களில் லெபனானிடம் தோல்வி கண்டது. அனைத்துலக அளவில் இதுவரை நடைபெற்ற 12 ஆட்டங்களில் மலேசிய கால்பந்து அணி வெற்றி பெற்றதில்லை. 


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.