Advertisement
Admin Login

23:15:28
Sunday
25 February 2018

வாழ்வியல் News

  • ஒரு கலெக்டரின் கடிதம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சப்-கலெக்டராகப்...

    16-02-2018
  • ஆண்குழந்தை பிறப்பதற்கான பத்து அறிகுறிகள்.!

    1/11ஆண்குழந்தை பிறப்பதற்கான பத்து...

    05-02-2018
  • பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும்! ஆனால்...

    ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு...

    04-02-2018
  • அடர் ஊதா: இந்த ஆண்டின் வண்ணம்

    பிரபல நிறுவனமான ‘பான்டோன் வண்ண மையம்’, 2018ஆம்...

    04-02-2018
  • இந்த 10 சுருக்க வார்த்தைகளின் விரிவாக்கம் தெரியுமா?

    நாம் தினமும் அடிக்கடி பேசும் போது...

    04-02-2018
  • பொங்கலோ பொங்கல்!

    அஸ்வத் வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி...

    11-01-2018
  • மகிழ்ச்சி குறையாமல் வாழ்வது எப்படி? பூனை சொன்ன பாடம்!

    'இந்த வாழ்க்கையில ஒரே ஒரு மகிழ்ச்சிதான்...

    11-01-2018
  • சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் தேங்காய்ப்பால் பேஸ்பேக்

    சருமத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் என்றும் இளமையாக வைத்திருக்க தேங்காய்ப்பாலை பயன்படுத்தி எப்படி பேஸ்பேக் தயாரிப்பது என்று பார்க்கலாம்.  உங்கள் சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய் பாலை பயன்படுத்தலாம். தேங்காய்ப் பால் சாப்பிடுவது எப்படி மிகவும் நல்லதோ அதேபோல் அழகிற்கும் அசர வைக்க்கும் நன்மைகளை தருகிறது. தேங்காய் பால் சரும பொலிவிற்கு உதவுகிறது. கருமையை போக்குகிறது. நிறத்தை கூட்டுகிறது. சுருக்கத்தைப் போக்கும் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் நன்மைகளை தருகிறது. தேங்காய் பாலை தினமும் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் உங்கள் சருமத்தில் என்னென்ன மாற்றங்கள் கிடைக்கும் என பார்க்கலாம். * கேரட் சாறு - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 1 டீஸ்பூன் இநத் இரண்டையும் நன்றாக கலந்து முகத்திற்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் உங்கள் சரும நிறம் அதிகரிக்கும். * முல்தானிமட்டி - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 1 டீஸ்பூன் இந்த இரண்டையும் நன்றாக கலந்து முகத்துக்கு பேக் போல் போடுங்கள். வாரம் ஒரு முறை செய்ய வேண்டும். விரைவிலேயே அழகு பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும். * உருளைக்கிழங்கு ஜூஸ் - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 1 டீஸ்பூன், பச்சை பயிறு மாவு - 1 டீஸ்பூன் இந்த மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு “பேக்” போடுங்கள். காய்ந்ததும் கழுவி விடுங்கள். வாரம் இருமுறை இதைச் செய்தால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும். ...

    10-01-2018
  • தமிழர்க்குப் புத்தெழுச்சியை ஊட்டும் புத்தாண்டுப் பொங்கல்

    இரா.திருமாவளவன் பாகம் ௧ தமிழர்கள் உழவுத் தொழிலை முதன்மைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்த முதுபெரு மக்களாவர். தொழில், பணி, உழைப்பு முதலான சொற்கள் உழுதல் வினையைக் குறித்தே உருவாகின. உல் எனும் வித்திலிருந்து உல்> புல்> பல்> பன்> பண்> பணி எனும் சொல் உருவாகியது. உல் எனும் வித்துச்சொல் துளைத்தல் பொருளையும் விளக்கும். நிலத்தைத் துளைப்பதே உழுதலாகும். இவ்வாறு நிலத்தைத் துளைத்துக் குத்திக் கிளறி பயிர் செய்கின்றமையால் உழவு எனும் சொல் உருவாகியது. உல்> துளைத்தல் , குத்துதல் பொருள் உல்> உழ்>உழு= நிலத்தைத் துளைத்தல் , குத்துதல் உல்> உழு> உழ> உழவு இவ்வாறு உருவானதே உழவு எனும் சொல்லாகும். உழவு தொழிலை அடிப்படையாகக் கொண்டே உழைப்பு எனும் சொல் உருவாயிற்று. உல்>உழு>உழை>உழைப்பு உழைப்பு= நிலத்தைக் குத்திக் கிளறி உழவு செய்தல். இக்கால் உழைப்பு என்பது அனைத்துத் தொழில்களுக்கும் ஆகி வந்து விட்டது. நிலத்தைத் தோண்டினால் குழி அல்லது பள்ளம் ஏற்படும். நிலத்தில் பள்ளம் பறித்து பயிர் செய்வதே பணி ஆயிற்று. பணி எனும் சொல்லின் மூல வித்தினை மேலே கண்டோம். இவ்வடிப்படையிலேயே பாடு எனும் சொல்லும் உருவாகியது. உல்> புல்> பல்> பள்>பள்ளம் உல்> புல்> பல்> பள்> பள்ளு உல்> புல்> பல்> பள்> பள்ளு> பட்டு பள் > படு> பாடு பாடு> நிலத்தைத் தாழ்வாக்கிக் குத்திக் கிளறி உழைத்தல். பாடு படுகிறேன், பாடாற்றினேன் எனும் சொற்களை நாம் வழக்கில் பயன்படுத்துவதைக் காண்க. தொழில் எனும் சொல்லும் நிலத்தை உழுவதொடு தொடர்புடையதே. உல்> துல்> துள்> தொள்> தொழ்> தொழில் தொழில்= நிலத்தைத் தோண்டி குத்திக் கிளறி செய்யும் உழவுப் பணி. தொழிலும் பின்னால் எல்லா வினைகளுக்கும் ஆகி வந்து விட்டது. திருக்குறளில், தொட்டத்தனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு. எனும் குறட்பாவில் வரும் தொட்டனைத்து எனும் சொல் தொட்டு + அனைத்து எனப் பிரியும். இதில் தொட்டு என்பது தோண்டுதலைக் குறிப்பதே. நிலத்தைத் துளைத்து அகழ்தலே தொட்டு என்பது. உல்> துல்> தொல்> தோள்> தோடு> தோண்டு உல்> துல்> தொல்> தொள்> தொட்டு இவ்வாறு நிலத்தை உழுதலை அடிப்படையாகக் கொண்டே வினைச்சொற்கள் உருவாகின. தமிழர் ஓர் ஆண்டினை ஆறு பெரும்பொழுதாகவும் ஒரு நாளினை ஆறு சிறுபொழுதாகவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே பகுத்து வைத்துள்ளனர். ஒரு நாள் என்பது 60 நாழிகைகளைக் கொண்டதாகும். பகல் பொழுது 30 நாழிகையாகவும் இரவு பொழுது 30 நாழிகையாகவும் அளவாகப் பகுக்கப்பட்டள்ளது.   பகல் = 30 நாழிகை இரவு = 30 நாழிகை ஒரு நாள் = 60 நாழிகை 60 நாழிகை கொண்ட ஒரு நாளினை இன்னும் நுட்பமாக தமிழர்கள் பகுத்துள்ளனர். 60 தற்பரை = 1 பரை 60 பரை = 1 நொடி 60 நொடி = 1 வினாடி 60 வினாடி = 1 நாழிகை 60 நாழிகை = 1 நாள் ஓராண்டிற்குரிய கால அளவு 2 கண்ணிமை = 1 நொடி 2 நொடி = 1 மாத்திரை 2 குரு = 1 உயிர் 2 உயிர் = 1 சணிகம் 12 சணிகம் = 1 வினாடி 60 வினாடி = 1 நாழிகை 2 1/2 நாழிகை = 1 ஓரை 3 3/4 நாழிகை = 1 முழுத்தம் 7 1/2 நாழிகை = 1 சாமம் வினைசார் சொற்கள் பெரும்பாலும் நிலத்தை உழுதலை அடிப்படையாகக் கொண்டு உருவாகினமையால் உழவுத் தொழிலானது தமிழரின் முதன்மைத் தொழில் என்பதை நாம் உணரலாம். இம்முதன்மைத் தொழிலை முதன்மைப்படுத்துவதே பொங்கலாகும். நிலவுலகத்தில் சூரியனின் ஒளி செங்குத்தாக விழுந்து ஒரு சுழல் வட்டப் பாதைக்குள் செல்லும். சூரிய ஒளி வீச்சின் ஒரு முழு வட்டமே ஓர் ஆண்டாகக் கணக்கிடப்படுகிறது. உலகின் தெற்கில் அமைந்துள்ள சுறவக் கோடு எனப்படும் மகரக்கோட்டில் ( cape of Capricorn) தொடங்கி இரண்டிரண்டு மாதங்களாக நகர்ந்து ஆறு மாதங்களில் சூரிய செங்குத்தொளி வடக்கு கடகப் பகுதிக்குச் செல்லும். இந்த ஆறு மாத கால நகர்ச்சியே வடசெலவாகும். இதனை உத்தராயணம் என்பர். உத்தராயணம் தொடங்கும் காலம் தை மாதம் முதலாம் நாள் அளவாகையால் தை ஒன்று மிக மிக முதன்மைக் காலமாகச் சூரிய ஒளி நகர்வில் கருதப்படுகிறது. கதிரொளிச் செலவு என்பதை வடமொழியில் சங்கராந்தி என்பர். இது முதன்மைக்குரிய சிறப்புக்குரிய ஆண்டு தொடக்கம் என்பதால்தான் மகா மகர சங்கராந்தி என்று சொல்லப்படுகிறது. சோதிட நூல்களிலும் இவ்வாறுதான் குறிப்பு உள்ளது. ஆரிய வடமொழி மயத்தால் ( sanskrisation) சுறவத்திருப்பினின்று வடக்கு நோக்கிச் செல்லும் கதிரொளி நகர்வான உத்தர அயணத்தை மறைத்தாலும் முகிலைக் கிழித்து வரும் முழு மதி போல வடமொழியாளர் சொல்லாட்சிகள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என உண்மை நிலைகளை வெளிப்படுத்துகின்றன. 1 குரு = 0.1666666666666667 second 1 மாத்திரை = 0.0833333333333333 second 1 கைந்தொடி = 0.0416666666666667 second 1 கண்ணிமை = 0.0208333333333333/ 20.83 milliseconds தமிழரின் மிக நுட்பமான இக்கணக்கு முறைகள் தொன்மையானவை. மிகத் தொன்மையான கணக்கு நெறிமுறைகளை ஆழமாக ஆய்ந்து கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் காரி நாயனார் எனும் கணக்காயர் கணக்கதிகாரம் எனும் அரிய நூலினை இயற்றினார் . இப்பெருமகன் சோழ நாட்டின் கொறுக்கையூர் எனும் ஊரைச் சேர்ந்தவராவார். கால அளவு, நீட்டல் அளவு, நிறுத்தல் அளவு முதலான கணக்கியல் அளவு முறைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. தொடரும்...

    09-01-2018

FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.