Advertisement

17:43:19
Saturday
21 April 2018

ஆன்மீகம் News

 • தன்வந்திரி பீடத்தில் சாபம் நீங்கி சந்ததி தரும் சனி சாந்தி ஹோமம்

  வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி...

  30-03-2018
 • சிவராத்திரியின் மகிமைகள்

  சிவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும்...

  12-02-2018
 • ஆஸ்ட்ரோவில் ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு

  முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் தெய்வீக...

  12-02-2018
 • 108 வருடத்துக்குப் பிறகு ‘பிரதோஷம்’! 108 பிரதோஷ தரிசனப் பலன் நிச்சயம்!

  108 வருடத்துக்கு பிறகு வரும் மகிமை மிக்க பிரதோஷ நன்னாள் இன்று. சிவனாருக்கு உரிய சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில், சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திர நாளில், சிவபெருமானுக்கு உரிய பிரதோஷம் சேர்ந்து வருகிறது என்று சொல்லிச் சிலாகிக்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதம் உத்தராயன புண்ய காலம் தொடக்க மாதம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்த தை மாதமே பிரதோஷ நாளில் தொடங்கியது அல்லது தை மாதப் பிறப்பில் பிரதோஷமும் சேர்ந்து வந்தது என்று பெருமையுடன் விவரிக்கிறார் பாலாஜி வாத்தியார். அதேபோல், சுமார் 108 வருடங்கள் கழித்து வருகிறது பிரதோஷம் இன்றைய தினம். அதாவது 29.1.18 ம் தேதியான இன்றைய தினம் ரொம்பவே உன்னதமான, மகோன்னதமான பிரதோஷம் என்று சிவ ரகஸ்யம் எனும் நுல் விவரிக்கிறது. இதற்கொரு கதை சொல்லப்படுகிறது. அதாவது, ஸ்ரீசைலம் திருத்தலத்தில் வாழ்ந்து வந்த அந்தணன் ஒருவன், ஏழ்மை நிலையில் இருந்தான். மேலும் இதனால் கொடும் பாவங்களைச் செய்து வந்தான். இந்த நிலையில், வழிபாடு இல்லாத ஆலயம் ஒன்றில், தன்னையும் அறியாமல் செய்த அவனுடைய செயலானது, ஈசனால், பூஜையாக ஏற்கப்பட்டது. வழிபாடாகவே ஏற்றுக் கொண்டான். அவனுக்கு வரங்களைத் தந்தருளினான் என்கிறது சிவ ரகஸ்யம் எனும் நூல். அப்படி வரம் பெற்று, பொன்னும் பொருளும் பெற்று, ஆடைகளும் ஆபரணங்களும் பெற்று, பசுக்களையும் குதிரைகளையும் , வீடுகளையும் நிலங்களையும் பெற்று இனிதே வாழ்ந்தான். அப்படி அவன் வரம் பெற்றது... திருவாதிரை நட்சத்திரமும் திரயோதசி திதியும் கூடிய திங்கட்கிழமை நன்னாளில் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், சிவபெருமானுக்கு உகந்த இந்த மூன்று விஷயங்களும் ஒருசேர வருவது வெகு அபூர்வம். அது 29.1.18ம் தேதியான இன்று வந்திருக்கிறது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சுமார் 108 வருடங்களுக்குப் பிறகு வருகிற இந்தப் பிரதோஷ நாளில், மறக்காமல் அருகில் உள்ள சிவாலயத்திற்கு மாலையில் செல்லுங்கள். நந்திதேவருக்கும் சிவபெருமானுக்கும் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளுங்கள். சந்தனம், பால், தயிர், இளநீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். வில்வமும் செவ்வரளியும் ஏனைய மலர்களும் வழங்கி வழிபடுங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும் சார்த்துங்கள். முடிந்தால் தயிர்சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். இன்னும் சொல்லப் போனால், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் வஸ்திரம் வழங்கி ஆராதனை செய்யுங்கள். நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல பாவங்களும் விலகிவிடும் என்பது உறுதி. ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம், ராகு கேது முதலான சர்ப்ப தோஷங்கள், களத்திர ஸ்தானத்தில் உள்ள தோஷங்கள், நவக்கிரக தோஷங்கள் முதலானவை நிவர்த்தியாகும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். இன்றைய பிரதோஷ நன்னாளில் வழிபட்டால், தொழில் மேன்மையடையும். வியாபாரம் விருத்தியாகும். லாபம் கொழிக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். கடன்களையெல்லாம் அடைப்பதற்கான வழி பிறக்கும். வாழ்க்கை சிறக்கும். திருமணத் தடை அகலும். தேர்வு எழுதும் மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி என்கிறார் பாலாஜி வாத்தியார். திங்கள், திரயோதசி, திருவாதிரை... மூன்றும் இணைந்த அரிதான பிரதோஷ நாளில், நமசிவாய நாயகனை, தென்னாடுடைய சிவனை வணங்குங்கள். எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்! நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம்! நன்றி: தி ஹிந்து ...

  28-01-2018
 • வாழ்க்கையில் வெற்றி பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை

  இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும்...

  10-01-2018
 • துயரங்களை போக்கும் தைமாத விரதம்

  தைமாதம் வரும் அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடும்.  தை மாதம் வரக்கூடிய அமாவாசை திதியில், நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்நாளும் இன்பமாக வாழலாம். வீட்டில் தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். அந்த நாள் 16.1.2018-ல் (செவ்வாய்க்கிழமை) வருகின்றது. தை அமாவாசை வழிபாடு தடைகளைத் தகர்த்தெரியும். அன்றுதான் அபிராமிப்பட்டர் நிலவு வரவழைத்த திருநாள். நடக்காததை நடத்திக் காட்டிய நாள் அது. மேலும் தைமாதம் வரும் வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடும். அம்பிகை ஆலயங்களில் சந்தனக் காப்பு சாற்றி வழிபட்டால் சிந்தனைகள் அனைத்தும் வெற்றிபெறும். இறைவனை அலங்கரித்துப் பார்த்தால் இனிய வாழ்க்கை மலரும். உடலை குளிர்ச்சியாக்கும் சந்தனத்தை அம்பிகைக்கு சாற்று வதன் மூலம் உள்ளம் குளிர்ச்சியாகி நமக்கு வேண்டும் வரம் தருவாள் அம்பிகை. ...

  10-01-2018
 • புராணங்களில் சாபங்கள் பற்றிய குறிப்புகள்

  புராணங்களை பார்த்தோம் என்றால், அதில் பல சாபங்களும், அந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற செய்த பரிகாரங்கள் பற்றியும் குறிப்புகள் இருப்பதைப் பார்க்க முடியும்.  இதிகாசங்களையும், புராணங்களையும் புரட்டிப் பார்த்தோம் என்றால், அதில் பல சாபங்களும், அந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற செய்த பரிகாரங்கள் பற்றியும் குறிப்புகள் இருப்பதைப் பார்க்க முடியும். சாபங்களில் 13 சாபங்கள் முக்கியமானவையாக உள்ளன. அவை: பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், பித்ரு சாபம், கோ சாபம், பூமி சாபம், கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குல தெய்வ சாபம் போன்றவை. பெண் சாபம்: பெண்களை ஏமாற்றுவது, உடன் பிறந்த சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பது, மனைவியை கைவிடுவது போன்றவற்றால் ஏற்படுவது பெண் சாபம் ஆகும். இந்த சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும். பிரேத சாபம்: இறந்த ஒருவரின் உடலை வைத்துக் கொண்டு, அவரை இழிவாகப் பேசுவதும், பிரேதத்தின் உடலைத் தாண்டுவதும், இறுதிச் சடங்கை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை அவருக்கு வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் சாபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு பிரேத சாபம் ஏற்பட்டவர்களின் ஆயுள் குறையும். பிரம்ம சாபம்: பாடம் சொல்லிக் கொடுத்த குருவை மறப்பது, கற்ற வித்தையை தவறாகப் பயன்படுத்துவது, தான் கற்றதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்காமல் மறைப்பது போன்ற செயல்களால் இந்த சாபம் ஏற்படும். இந்த சாபத்தால் வித்யா நஷ்டம் எனப்படும் கல்வி கற்க முடியாத நிலை உண்டாகும். சர்ப்ப சாபம்: அவசியம் இல்லாமல் பாம்புகளை அடித்துத் துன்புறுத்துவது, அவற்றின் இருப்பிடங்களை அழிப்பது போன்ற செயலால் சர்ப்பசாபம் உண்டாகும். இதனால் கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டு, திருமணம் தடைபடும். பித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும் பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். இது பாலாரிஷ்ட சாபத்தை ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்து போவது போன்றவற்றை உண்டாக்கும். கோ சாபம்: பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் தவிக்கும் பசுவிற்கு தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும். பூமி சாபம்: ஆத்திரத்தில் பூமியை அடிக்கடி காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை பூமிக்குள் போட்டு புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டாக்குவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை ஏற்படுத்தும். பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும். கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். இந்த சாபத்தால் நீர் கிடைக்காமல் அவசதிப்படுவார்கள். விருட்ச சாபம்: மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தினால் கடன் மற்றும் நோய் உண்டாகும். தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவுகளுக்குள் விரிசல் உண்டாகும். ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்ற செயல்களால் ஏற்படும். ரிஷி சாபத்தால் வம்சம் அழியும். முனி சாபம்: எல்லை தெய்வங்கள் மற்றும் சின்னச் சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு வரலாம். குலதெய்வ சாபம்: இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறந்து போவதால் ஏற்படுகிறது. இந்த சாபத்தின் காரணமாக குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்து கொள்ளும். ...

  10-01-2018
 • ராசி பலன் 11-01-2018

  மேஷம் பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை ரிஷபம் குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க் மிதுனம் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ் கடகம் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை சிம்மம் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே கன்னி கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். முகப்பொலிவுக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட் ராசி பலன்கள் துலாம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா   விருச்சிகம் கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வரக்கூடும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க் தனுசு சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம் மகரம் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு கும்பம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை மீனம் சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா ...

  10-01-2018

FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.