ஜோகூர் மாநிலத்தில் எதிர்க்கட்சியின் ஆட்சி அமையுமா?

நடக்கப்போகும் 14ஆவது பொதுத் தேர்தலில்,ஜோகூர் மாநிலத்தில் எதிர் கட்சியின் ஆட்சி அமையுமா? என்ற கேள்வி பரவலாகக் கேட்கப்படுகிறது.

இதற்கு முக்கியக் காரணம் தேசிய முன்னணி ஜொகூரின் கோட்டை என்று நெஞ்சை நிமிர்த்தி கூறப்பட்ட காலம் போய்விட்டதாக அரசியல் பார்வைகள் கூறுகின்றன.

10 நாற்காலிகள் மட்டுமே தேவை

ஜோகூர் மாநிலத்தில் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில்19 தொகுதிகள் எதிரிக்கட்சியின் இருக்கிறது. அண்மையில் அம்னோவிலிருந்து வெளியாகி
ப்ரிபூமி கட்சியில் இணைந்து, அந்தக் கட்சிக்கு கௌரவச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் டத்தோ டாக்டர் ஷாரூடின் முஹமட் சாலே,ஜோராக் மூவார் சட்டமன்ற உறுப்பினராவார். இவருடைய வெளியேற்றதினால் தேசிய முன்னணி அம்மாநிலத்தில் 2/3 பெரும்மான்மையை இழந்துள்ளது. ஜோகூர் மாநில ஆட்சியில் பெரும்பான்மை பெற இன்னும் 10 நாற்காலிகள் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்குத் தேவையாக இருக்கிறது.

ஜோகூர் சட்டமன்றத்தில் இந்திய வேட்பாளர்கள்

புக்கிட் கம்பிர்- மு.அசோஜன்
தெங்காரோ- ரவீன் குமார் கிருஷ்ணசாமி
கஹாங்-வித்தியானந்தன்

ஜோகூர் மாநிலத்தில் தற்போது எதிரிக்கட்சியின் வசமிருக்கும் 19 தொகுதிகளில் ஜ.செ.கட்சி 13 தொகுதிகளில் வென்றுள்ளது. பி.கே.ஆர் 1 தொகுதியை வென்றுள்ளது. 3 நாற்காலிகளை பாஸ் வென்றுள்ளது. அமானா மற்றும் பிரிபூமி ஆகிய கட்சிகளுக்குத் தலா 1 தொகுதி தங்களின் கைவசம் வைத்துள்ளது. இந்த இரு நாற்காலிகளும் கட்சித் தாவுதலால் கிடைத்தவை.

மே மாதம் 17 -இல் அல்லது தன்னிச்சையாக ஜூன் 24-இல் நாடாளுமன்றம் களையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிடப் பெரிய எதிர்பார்ப்பு யாருக்கெல்லாம் சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதாகும். தேசிய முன்னணி பொறுத்த மட்டில் சென்ற பொதுத் தேர்தலில் ஜோகூர் ம.இ.காவுக்கு
தெங்காரோ (N33 TENGGAROH ) , கஹாங்(N31 KAHANG) , புக்கிட் கம்பிர் (N9 GAMBIR) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் பத்திரமான தொகுதிகளாக இந்திய வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளிலும் ம.இ.கா -தேசியமுன்னணி வெற்றி பெற்றது.

எதிர்க்கட்சி தரப்பில்( பக்காத்தான் ரக்யாட் பி.கே.ஆர்+ ஜ .செ.க+ பாஸ் ) 3 சட்டமன்ற தொகுதிகள் இந்திய வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
இஸ்லாம் சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் பாஸ் கட்சியின் சார்பாக குமுதா ராமன், தீராம்(N40 TIRAM ) தொகுதியில் அம்னோ வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட்டார். 16,273 வாக்குகள் பெற்ற இவர் 7443 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டார். ( பின் இணைப்பை பார்க்கவும்)

தெங்காரோ (N33 TENGGAROH ) தொகுதியில் தேசிய முன்னனி வேட்பாளரான ரவீன் குமார் கிருஷ்ணசாமியை எதிர்த்து பி.கே.ஆர் சார்பாக முருகன் முத்துசாமி ( ரோனி முருகன் ) களம் இறக்கப்பட்டார். 4,040 வாக்குகள் பெற்ற இவரை 13,014 பெரும்பான்மையில் ம.இ.கா-தேசிய முன்னணி தோல்விகாணச் செய்தது.

சங்கர் ரெங்கநாதன்

பாலோ( N30 PALOH) சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட்ட ஜ .செ .க கட்சியின் வேட்பாளர் சங்கர் ரெங்கநாதன் 103 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

 

இந்தியர்களுக்கு ஒதுக்கப்படும் நாற்காலிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

தேசிய முன்னணி பொறுத்த வரைக்கும் இந்திய வேட்பாளர்களுக்காகப் பேசுவதற்கு ம.இ.கா உள்ளது. ஜோகூர் மாநிலத்தில் உள்ள சட்டமன்றங்களில்
சென்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெட்ரா அதே வேட்பாளர்களை நிறுத்துவதில் ம.இ.கா தலைமைத்துவம் முடிவெடுத்திருக்கலாம். ஆகவே ஜோகூர் மாநிலம் பொறுத்தவரை தேசிய முன்னை சார்பில் 3 நாற்காலிகள் உறுதி. சென்ற தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் 3 கட்சிகளே இருந்தன. ஆனால் தற்போது ப்ரிபூமி, அமனா, பி.கே.ஆர், ஜ .செ.க கட்சிகள் என்று நான்கு காட்சிகள் உள்ளன. இதில் ஜ .செ.க கட்சி தவிர பிற 3 காட்சிகளிலும் பெரும்மான்மையாக மலாய்க்காரர்களே உள்ளனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தரப்பில் இந்தியர்களுக்கு ஒதுக்கப்படும் நாற்காலிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஜாம்பவான்கள் பங்களித்த ஜ.செ.க கட்சியில் இந்தியர்களுக்கு எத்தனை நாற்காலிகள் ?

 

குறிப்பாக பட்டு, டேவிட், கர்பால் போன்ற இந்திய ஜாம்பவான்கள் பங்களித்த ஜ.செ.க கட்சியில் இந்தியர்களுக்கு எத்தனை நாற்காலிகள் ஒதுக்கப்படும் என்று இந்திய சமூகம் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறது. இருக்கும் சட்டமன்ற தொகுதிகள் உட்பட மேலும் 10 சட்டமன்ற தொகுதிகள் வெற்றி பெற்றால் இந்த மாநிலத்தை எதிர்க்கட்சியின் வசம் கொண்டுவந்து விடலாம் என்று போட்டிருக்கும் கணக்கில் இந்தியர்களுக்கு நிச்சயம் இடமிருக்க வேண்டும் என்று சமூகத்திலிருந்து குரல் எதிரொலிக்கிறது.

சென்ற பொதுத் தேர்தலில் லாபீஸ் நாடாளுமன்றத்தின் ஜ.செ.க வேட்பாளராக டாக்டர் ராம கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். மயிரிழை வாக்கு வித்தியாசத்தில் தேசிய முன்னணியிடம் தோல்வி கண்டார். சங்கருக்கும் அதே நிலை தான். பாலோ சட்டமன்றத்தில் மயிரிழையில் தோல்வி கண்டார். இவர்கள் இருவரும் வட்டார மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவர்களாக இல்லாவிட்டாலும், கட்சி சின்னத்தின் செல்வாக்கு அவர்களுக்கு வாக்குகளை அள்ளித்தந்தது என்று அரசியல் கணிப்பு கூறுகிறது.

மூத்த அரசியல்வாதி என்று கருதப்படும் டாக்டர் ராம கிருஷ்ணனை நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்பாளராகக் கட்சியால் மீண்டும் பரிந்துரைக்கப்படுவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் பெரிதும் எதிரிபார்க்கின்றனர். ஜோகூர் மாநிலத்தில் குறிப்பிட்டத் தொகுதிகளில் இந்தியர்களின் சக்தி வாய்ந்த வாக்குகள் வெற்றியை நிர்மாணிக்க உதவும் என்பதாலும் இந்தியர்களின் மத்தியில் ஜ .செ.க செண்டிமெண்ட் தொடர்ந்து இருப்பதாலும் கூடுதல் நாற்காலிகள் ஒதுக்கப்படவேண்டும் என்பது பொது மக்களின் எதிர்ப்பார்ப்பாகும் .

 

பேசப்படும் தலைவர்களும் பேசப்படும் தொகுதிகளும்

 

ரோனி முருகன் ( கெலாங் பாத்தா தொகுதித் தலைவர்,மாநில உதவித் தலைவர் -பி.கே.ஆர்)

 

ஜீவன் சுப்ரமணியம்( மாநில இந்தியப்பிரிவு தலைவர்-அமனா)
கோபால கிருஷ்ணன்( கூலாய்  தொகுதித் தலைவர் -பி.கே.ஆர்)

ஜோகூர் மாநிலத்தில், இந்தியத் தலைவர்களை அங்குள்ள இந்திய மக்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.மக்களால் பேசப்படும் இந்திய எதிர்கட்சித் தலைவர்களாக ரோனி முருகன் ( கெலாங் பாத்தா தொகுதித் தலைவர்,மாநில உதவித் தலைவர் -பி.கே.ஆர்), ஜீவன் சுப்ரமணியம்( மாநில இந்தியப்பிரிவு தலைவர்-அமனா),கோபால கிருஷ்ணன்( கூலாய்  தொகுதித் தலைவர் -பி.கே.ஆர்), சந்திர சேகரன் ( சீனாய் உத்தாமா கிளைத்த தலைவர்-ஜ .செ க.) ஆகியோர் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

.கே.ஆர் சார்பில் இந்தியர்களுக்கு இரண்டு சட்டமன்ற தொகுதிகள் வழங்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் கோபால கிருஷ்ணன் கட்சியின் முடிவுக்காகக் காத்துக் கொண்டிருப்பதாக கட்சி தகவல்கள் கூறுகின்றன. இவருடைய கணிப்பு சரியானால் ஹராப்பான் கூட்டணிசார்பில் ஜோகூர் சட்டமன்ற தொகுதிக்கு 4 இந்திய முகங்கள் தேர்தல் தேசிய முன்னணியின் வேட்பாளரை எதிர்த்துக் களம் காண்பது நிச்சயம்.

சந்திர சேகரன் ( சீனாய் உத்தாமா கிளைத்த தலைவர்-ஜ .செ க.)

பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ரோனி முருகன், லாயாங் லாயாங் தொகுதிக்கு பி.கே.ஆர் கட்சியால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. கட்சியின் ஆணைப்படி அத்தொகுதியில் சேவைமையம் திறந்து வைத்து களப்பணியை செய்து வருகிறார். ஜீவன் சுப்பிரமணியம் பூலோ காசாப் தொகுதியில் களப்பணியில் இறங்கி உள்ளார். ஜ.செ.க கட்சி உறுப்பினர்களில் நன்கு அறிமுகமான சந்திரன் என்று அழைக்கப்படும் சந்திர சேகரன் பாலோ சட்டமன்றத்திற்குத் தேர்தெடுக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. பி.கே.ஆர் சார்பில் இந்தியர்களுக்கு இரண்டு சட்டமன்ற தொகுதிகள் வழங்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் கோபால கிருஷ்ணன் கட்சியின் முடிவுக்காகக் காத்துக் கொண்டிருப்பதாக கட்சி தகவல்கள் கூறுகின்றன. இவருடைய கணிப்பு சரியானால் ஹராப்பான் கூட்டணிசார்பில் ஜோகூர் சட்டமன்ற தொகுதிக்கு 4 இந்திய முகங்கள் தேர்தல் தேசிய முன்னணியின் வேட்பாளரை எதிர்த்துக் களம் காண்பது நிச்சயம்.