படிவம் 2 சரித்திர பாட புத்தகத்தில் எல்லாமே தப்பு தப்பா இருக்கு.

படிவம் 2 பாடப்புத்தகத்தில் உண்மையான வரலாற்றுத் தகவல்களைக் கடத்தி இருக்கிறார்கள் என்று புலனத்தில் (வாட்ஸாப்) பரவலாகி வரும் குரல் பதிவின் தகவல்கள் உண்மைதான் என்று நாடு தழுவிய அளவில் சரித்திரப் பாடத்தைப் படித்துக் கொடுக்கும் ஆசிரியர்களும் வரலாற்று நேசர்களும் தமிழ் முரசிடம்தெரிவித்தனர்.

ஓர் ஆசிரியரின் குரலாகப் பிரதிபலிக்கும் அந்த ஆடியோவில்,

இடை நிலைப் பள்ளியின் படிவம் 2 வரலாறு புத்தகத்தில் உண்மைத் தகவல்கள்முழுமையாகவும் தெளிவாகவும் சொல்லப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட இனத்தின் வரலாற்றை முன்னெடுக்கும் மறைமுக சூழ்ச்சி என்றும் அந்தக்குரல் பொருள்படுத்தியிருக்கும் தகவல்கள் குறித்து சில சரித்திர ஆசிரியர்களுடன் கேட்ட போது, மாணவர்களுக்கு மாற்றி அமைக்கப்பட்ட வரலாற்றுத் தகவலை சொல்லிக் கொடுக்க மனம் கஷ்டப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

படிவம் 1 புத்தகத்தில் உள்ள அதே பாடத்தைப் படிவம் இரண்டிலும்

புகுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. இருப்பினும் பழைய புத்தகத்திலாவது வருடங்களும் திகதிகளும் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது.ஆனால் இப்புதிய புத்தகத்தில் நடந்த சம்பவங்களை நூற்றாண்டு(abad/kurun) என்று கூறி

உண்மைத் தகவல்களை மாணவர்கள் அறிவதிலிருந்து மறைக்கப்பட்டுள்ளதாகக்கூறப்பட்டுள்ளது.

 

தகவல் பிழையும் இப்புத்தகத்தில் உண்டு. உதாரணமாக மலாய் தீவுகளின் தோற்றம், முதல் நூற்றாண்டு என்று பதிவாகியுள்ளது. ஆனால் சரித்திர நிபுணர்கள் சரித்திரத் திரட்டில், மலாய் தீவு, முதல் நூற்றாண்டில் தொடங்கவில்லை என்று கூறுவதாக ஆடியோ பதிவு கூறுகிறது. அந்தப்பாடப்புத்தகத்தில் புகுத்தப்பட்டிருக்கும் தகவல்கள் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் மாணவர்கள் சுலமாகப் புரிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் திணிக்கப்பட்டிருப்பதாக ஆடியோ குரல் நம்புகிறது. பெரும்பாலும் வரலாறு கற்றுத் தரும் ஆசிரியர்கள் வரலாறு அறியாதவர்களாகவே பாடம் சொல்லித் தர வந்துவிடுகின்றனர். இவர்களுக்கு மாற்றி எழுதப்பட்ட பாட புத்தகமே கருவூலமாக இருக்கிறது என்று ஆடியோ குரலின் பின்னனியில் இருக்கும் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவிஜயா ஆட்சியாளர், மஜாபாஹிட் ஆட்சியாளர் என்று குறிப்பிடாமல் வெறும் ஆட்சியாளர்கள் என்ற பொதுவான சொல் இப்புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘அலாம் மலாயு’ என்ற சொல் ஆட்சியாளர் சொல்லுக்குப் பின் பயன்படுத்தப்படவேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்சியாளர்களைக் குறிப்பிட்டுச் சொல்வதைத் தவிர்த்துள்ளனர்.

5 முதல் ஆறு ஆண்டுகளில் வரலாறு புத்தகத்தில் அதிர்ச்சி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர். தென் கிழக்காசிய இந்தப் பிராந்தியத்தில் தோன்றிய முதல் நாகரிகம் மலாய்க்காரர்கள் என்பதை வழிய நிறுத்தும் நோக்கத்தில் இது நடந்துள்ளதாக பூனம் ஆடியோ பதிவு கூறுகிறது

நடந்த உண்மையான வரலாறு தகவல்கள் சில குறுகிய நோக்கம் கொண்டவர்களால் கடத்தப்பட்டு விட்டதால் உண்மை தெரிந்த ஆசிரியர்கள் முன் வந்து கல்வி அமைச்சுக்கு இது குறித்து மகஜர் ஒன்றை அனுப்பவேண்டும். அதற்கு உதவ தாம் தயார் என்று ஆடியோ நபர் தெரிவித்துள்ளார். இதனை இப்படியே விட்டு விட்டால் நம் தலைமுறைக்கு உண்மையான வரலாறு தெரியாமல் போய்விடும். வரலாறை மறைப்பதும் நூல் நிலையத்தை எரிப்பதும் ஒன்றுதான். இரண்டு ஓர் இனத்தின் அடையாளத்தைக் கொன்று விடும் என்று
வரலாற்றின் மேல் அக்கறையுள்ள ஆசிரியர்களும் நேசர்களும் நிருபரிடம் கூறினர்.

 

 

இரா.சரவண தீர்த்தா