என்ன கொடுமை சார் இது? -மகாதீர்

கொடுங்கோலன் என்று சொல்லப்பட்ட எனது ஆட்சியின் காலத்தில் இந்த கொடுமை நடக்கவில்லை. உடல் நலம் குறைவு உள்ளவரை சந்திக்க அனுமதி இல்லையா? என்று பக்காத்தான் ஹராபன் தலைவரான டாக்டர் மகாதிர் முகமட் கேள்வி எழுப்பினார்.
இன்று, சிறைச்சாலை அதிகாரிகள் பக்காத்தான் ஹராபன் தலைவரான டாக்டர் மகாதிர் முகமட்அன்வார் இப்ராஹிமை சந்திப்பதை தடை செய்ததைக் குறித்து கருத்து கூறுகையில் மகாதீர் இவ்வாறு பேசினார்.

தம்மை பிரதமர் வேட்பாளராகத் தேர்தெடுத்திருக்கும் முடிவை எதிர்க்காததற்கு நன்றி தெரிவிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கெஅடிலான் கட்சியின் தோற்றுநர் அன்வார் இப்ராகிம்மைச் சந்திக்கச் சென்றிருந்த மகாதீரை சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இது உள்துறை அமைச்சிடமிருந்து வந்த கட்டளை என்று மகாதீர் கூறினார்.
அன்வார் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அரோக்கியத் தேற்றல் சிகிச்சை பெற்று வருகிறார்.
நான் சோகமாக உணருகிறேன். நான் அவரை சந்திக்க விரும்பினேன், உண்மையில் அவரை ஒரு வேட்பாளராக (பிரதம மந்திரி) ஆதரிப்பதை எதிர்க்காததற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், “என்று அவர் கூறினார்.