நேரடி விற்பனைத் தொழில் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு தேவை!

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என எதையும் ஆராயாமல், பேராசை காரணத்தால், அங்கீகாரம் இல்லாத எம்.எல்.எம் நிறுவனங்களை நம்பி தன் வாழ்நாள் சேமிப்பு எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டி ஆன பலர் இருக்கிறார்கள்!

எம்.எல்.எம் நிறுவனங்களைப் பற்றி தொடர்ந்து அரசாங்கம் மக்களுக்கு அறிவித்தும் எச்சரித்தும் வந்தாலும், தனிநபர் முடிவாகவே இதுபோன்ற திட்டத்தில் பங்கு கொண்டு பலர் தமது சேமிப்புகளை இழக்கிறார்கள்.
பண ஆசை எல்லாருக்கும் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. அது பொருத்தமான நேரங்களில் மற்றவர்களால் விசிறி விடப்படும் பொழுது  பற்றிக் கொள்கிறது. கண்ணை மூடிக்கொண்டு பல ஏமாற்று நிறுவனங்களில் முதலீடு செய்து பலர் ஏமாற்றம் அடைகின்றனர்.

ஒரு காட்டு நிலத்தைச் செம்மைப்படுத்த எண்ணி அழிக்க நினைக்கும் போது, அந்த நிலத்தில் விளையும் மல்லி், இஞ்சி போன்ற நல்ல செடிகளும் பாதிக்கப்படுவதைப் போல, ஊடகங்களில் எம்.எல்.எம் குறைகளைப் பற்றி சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லும்போது, எம்.எல்.எம் தொடர்பான நிறைகளை மக்கள் அறியாமல் போகின்றனர்.
நேரடி விற்பனைத்துறையில் பல நிறுவனங்கள் உலகளாவிய நிலையில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இன்றைக்கும் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. அவ்வகையில், இந்தியர்களுக்குத் தான் தலைமை தாங்கும் கே-லிங்க் இண்டெர்நேஷனல் நிறுவனம், மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்டு  உலகளாவிய நிலையில் 54 நாடுகளில் சொந்த கட்டடங்களில் அலுவலகம் கொண்டு, கடந்த 17 வருடங்களாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று கே-லிங்க் நிறுவனத்தின் வர்த்தக ஆலோசகரும், வங்காளதேச கே-லிங்க் கிளை நிறுவனத்தின் இயக்குநருமாகிய டத்தோ குணாளம் சுப்ரமணியம் தெரிவித்தார்.

“கே-லிங்க் வர்த்தகத்தில் முதலீடு திட்டங்கள் என்றெல்லாம் கிடையாது. நிறுவனச் சட்டப்படி ஒருவர் 50 வெள்ளி கட்டணத்தில் உறுப்பினராக இணைந்து, தனக்குத் தேவையான தயாரிப்புகளை வாங்கிக் கொள்ளலாம். உலகலாவிய நிலையில் இயங்கும்  எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் இதுதான். மக்களை அனுதினமும் சந்தித்துப் பல சவால்களை எதிர்நோக்கி இந்த வியாபாரத்தில் ஈடுபடும் எங்கள் அங்கத்தினர்களை நிபுணத்துவம் பெற்ற சேவையை வழங்கக்கூடிய வகையில், அவர்களுக்கு வியாபாரம் தொடர்பான நுணுக்கங்களைக் கற்றுத் தரும் பல திறன்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் விவகார அமைச்சின் நடத்தை நெறிமுறைகளை வலியுறுத்தும் மலேசிய நேரடி விற்பனைச் சங்கத்தில் கே-லிங்க் 2014-ஆம் ஆண்டில் உறுப்பியம் பெற்றது. தேசிய நிலையிலும் பன்னாட்டு நிலையிலும் நேரடி விற்பனைத்துறையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 1978-ஆம் ஆண்டு இந்தத் தேசிய விற்பனைச் சங்கம் தொடங்கப்பட்டது. 1998-ஆம் ஆண்டு அமைச்சினால் தொடங்கப்பட்ட நடத்தை நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு ஒழுக்கமான நேரடி விற்பனை நடைமுறையைப் பின்பற்றும் நிறுவனங்களுள் கே-லிங்க் முன்னிலை வகிக்கின்றது.

அத்துடன், குளோபல் பிஸ்னஸின் தலைசிறந்த நிர்வாகத்திற்கான விருது, ஜெர்மனியின் நேரடி விற்பனைச் சங்கத்தின் தலைசிறந்த நிறுவனத்திற்கான விருது, ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தலைசிறந்த நேரடி விற்பனை நிறுவனம், இளம் தொழில்முனைவோருக்கான விருது, ஆசிய பசிபிக்கின் முன்னோடி நேரடி விற்பனை நிறுவனத்திற்கான விருது, மலேசியாவின் தலைசிறந்த 20 எம்.எல்.எம் நிறுவனத்திற்கான விருது, வணிக நிலைத்தன்மைக்கான விருது உட்பட மேலும் பல உள்நாட்டு, வெளிநாட்டு விருதுகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட எம்.எல்.எம் நிறுவனமாக கே-லிங்க் இண்டெர்நேஷனல் திகழ்கிறது.

மேலும், நிறுவன அளவில் மட்டுமல்லாது, தனி நபர் என்ற நிலையில் கே-லிங்க் தொழில் முனைவர்கள் பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் ஒரு நிலைத்தன்மையை அடைந்துள்ளனர். அவ்வகையில், கே-லிங்க் இந்திய வர்த்தகர்களுக்கு மிகவும் பரிட்சயமான சி.ஏ. ரெகோ ராசு, எஸ்.சி.ஏ. சேம் என்ற முனுசாமி சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும், 2014-ஆம் ஆண்டில் உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் விவகார அமைச்சு ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் நேரடி விற்பனைத்துறையில் மாதம் பல்லாயிரம் வெள்ளிக்கும் மேல் வருமானம் ஈட்டக்கூடிய தனிநபர் சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

https://k-link.com/

இதுபோல நேர்மையாக, சிரமப்பட்டு உழைக்கும் நல்ல வியாபாரத் திட்டத்தைப் பலர் நம்புவதில்லை. ஏனெனில், குறைந்த வருமானத்தில் தொடங்கும் இந்த வியாபாரம் பலரை ஈர்ப்பதில்லை. உழைக்காமலேயே பணத்தை மட்டும் முதலீடு செய்து பெரிய அளவில் பணம் ஈட்ட பலர் நாட்டம் கொள்கிறார்கள். ஆனால், மக்களுக்குச் சேவை செய்து, அதன்வழி பொருள் ஈட்டும் இந்த வணிகத்தில் ஆயிரமாயிரம் எங்கள் உறுப்பினர்கள் நாளும் உழைத்து வருகிறார்கள்.

எத்தனை சிரமங்கள் துன்பங்கள் ஏமாற்றங்கள் நேர்ந்தாலும், தண்ணீருக்குள் அழுகின்றன மீன்களைப் போல இவர்கள் எல்லாவற்றையும் சமாளித்துக் காலத்தால் மிகப் பெரிய வெற்றியாளர்களாக நிலையான வளர்ச்சி காண்கிறார்கள். திடீர் பணக்காரர் ஆகும் திட்டத்திற்கும், நேர்மையான இது போன்ற திட்டத்துக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு.
பண ஆசையால், ஒருவர் கடுமையாக உழைத்துச் சம்பாதிப்பதை இழக்கக்கூடாது என்ற உயரிய நோக்கத்தின் வெளிப்பாடாக கே-லிங்க் எப்போதும் தனது அங்கத்தினர்கள் நேர்மையாகவும் கண்ணியமாகவும் நேரடி விற்பனைத்துறையின் சட்டத்திட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டுச் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்துள்ளது                                                                                                                                                                                                                                                                     கே-லிங்க் இண்டெர்நேஷனல்.

உண்மையாக, நேர்மையாக உழைக்கும் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய வகையில் செயல்பட்டு, நமது இந்திய மக்கள் பண மோசடிகளில் ஏமாந்துவிடக்கூடாது என்பதில் கே-லிங்க் நிறுவனத்தினர் எப்போதும் கவனமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது” என்று அவர் மேலும் விவரித்தார்.
சமூக அக்கறை கொண்ட இந்நிறுவனத்தின் முயற்சிகளுக்கும் திட்டங்களுக்கும் அங்கீகாரமாக ஆண்டுதோறும் பல்வேறு விருதுகள் கிடைக்கப் பெறுவது வழக்கமாகிவிட்ட நிலையில், அண்மையில் இன்றைய சமூகத்தின் அறிவுசார் மேம்பாட்டிற்குப் பங்களித்து, தொழில்முறை நடவடிக்கைகளில் சிறந்த சாதனைகளை ஆற்றும் நபர்களுக்கு வழங்கப்படும் விருதான சாக்ரடீஸ் விருது கே-லிங்க் நிறுவனத்தின் வர்த்தக ஆலோசகரும், வங்காளதேச கே-லிங்க் கிளை நிறுவனத்தின் இயக்குநருமாகிய டத்தோ குணாளம் சுப்ரமணியம் அவர்களுக்கு லண்டனில், ஆக்ஸ்போர்ட் நகரில் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

https://k-link.com/
நிலைத்தன்மையும் வளர்ச்சியும் ஒருங்கே அமைந்த கே-லிங்க் போன்ற நிறுவனம் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய உச்சப்பட்ச சாதனையாக இதனைத் தான் கருதுவதாகவும், எம்.எல்.எம் வியாபாரத்தின் நெளிவுசுளிவுகளை உணர்ந்து செயல்படும்போது வெற்றிகள் பிரதிபலனாக அமையும் என தான் நம்புவதாக டத்தோ குணாளம் தெரிவித்துக்கொண்டார்.