அணுசக்தி ஒப்பந்தம்: ஐரோப்பா – ஈரான் நாளை பேச்சுவார்த்தை

ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை நிலைக்கச் செய்வதற்கான பேச்சுவார்த்தை பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ùஸல்ஸில் வியாழக்கிழமை (ஜன. 11) நடைபெறுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவேத் ஸரீபும், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்பதை உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் கடந்த 2015-ஆம் ஆண்டில் இரு தரப்பினருக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.